கம்பத்தில் தெருநாய் கடித்து 20 பேர் காயம்: இரவில் செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சம்

3 months ago 17

 

கம்பம், அக்.8: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலைகளில் டூவீலர்களை விரட்டிச் செல்வது, குழந்தைகளை கடிக்க முயல்வது என பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், நகரில் பெண்கள், குழதைகள் இரவு நேரங்களில் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அவ்வப்போது தெருநாய்கள், பொதுமக்களை கடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் நகரில் உள்ள கிராமச்சாவடி தெருவில், தெருநாய் ஒன்று பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்க தொடங்கியது. கிராமச்சாவடி தெருவைத் தொடர்ந்து, அரிசி கடைத் தெரு, வேலப்பர் கோயில் வீதி என 20 பேரை நாய் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. நாய் கடித்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களை கடித்த தெருநாயை நகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். இதனால், நகரில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் பொதுமக்கள் சென்று வந்தனர். மேலும், நகரில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கம்பத்தில் தெருநாய் கடித்து 20 பேர் காயம்: இரவில் செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article