கமுதி, ஜன.26: கமுதி அருகே செங்கப்படையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரசார ஊர்வலம் கிராமத்தின் பல்வேறு தெரு பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில் மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முடிவில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
The post கமுதி அருகே தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.