கமல்ஹாசன் பிறந்தநாள் : 'தக் லைப்' படத்தின் டீசர் இன்று வெளியாகிறது

2 months ago 11

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், கமல்ஹாசன் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் . 

Read Entire Article