கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா?

3 hours ago 1

சென்னை,

கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறது.

இதற்கிடையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், அருண்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article