கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் அஸ்வத் மாரிமுத்து

3 hours ago 2

சென்னை,

2020-ம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் சமீபத்தில் 'டிராகன்' படம் வெளியானது. இந்த பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகை கயாடு லோஜர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த திட்டம் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் கமல்ஹாசனுடனான கூட்டணியை அஸ்வத் மாரிமுத்து அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Entire Article