கமல்ஹாசனுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

2 months ago 12

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். என தெரிவித்துள்ளார் 

Read Entire Article