ரெட்டியார்சத்திரம், ஜன. 1: திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி, கசவனம்பட்டி, நீலமலைக்கோட்டை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வடி பகுதி மேம்பாட்டு திட்டத்தை நபார்டு வங்கி செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னிவாடி பேரூராட்சி புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நபார்டு வங்கி சார்பில் கிராம அறிவு மையம் மற்றும் கிராம கமிட்டி அலுவலகம் திறக்கப்பட்டது. சங்க தலைவர் ரிச்சர்டு மரியசெல்வம் தலைமை வகித்தார்.
விவசாயிகள் அரசு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அரசாங்கத்திடமிருந்து நலத்திட்ட உதவிகள் பெற்றுக் கொள்ளவும் இந்த அலுவலகம் ஒரு வழிகாட்டு மையமாக திகழும். மேலும் மின்னணு சேவைகளை இங்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதில் துணை பொதுமேலாளர் சோமசுந்தரம், மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஹரிஷ் மற்றும் கன்னிவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர்கலந்து கொண்டனர்.
The post கன்னிவாடியில் கிராம கமிட்டி அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.