கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

2 weeks ago 2

 

கன்னியாகுமரி, ஜன.26: கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் திரிவேணி சங்கம சாலையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகா சிங், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பாரதி, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தின்போது திரிவேணி சங்கம கடற்கரை சாலை தூய்மைப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. இதில் பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகன், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article