
கன்னியாகுமரியில் சொகுசு கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் பகுதியில் சாலை ஓர கால்வாயில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் உள்ள சகதியில் கார் சிக்கிக் கொண்டதால் வெளியே வர முடியாமல் காரை ஓட்டி வந்த கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (48 வயது) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்வாய் சகதியில் மாட்டிய காரை அப்பகுதி இளைஞர்கள் வெளியே எடுத்தனர்.