கன்னியாகுமரி, மே 21: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் நாகர்கோவில் கலைநகரை சேர்ந்த அசோக் (31) என்பவர் ஓட்டினார். கொட்டாரத்தில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே வில்லுக்குறி குளுமைக்காடு பகுதியை சேர்ந்த ஆன்லிஸ் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மேயர் கார் மீது மோதியது. இதில் காரின் இடது முன்பகுதி சேதமடைந்தது. இதுபோல பைக்கும் சேதமடைந்ததோடு, ஆன்லிசும் காயமடைந்தார். அவர் குடிபோதையில் பைக்கை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கார் டிரைவர் அசோக் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post கன்னியாகுமரி அருகே மேயர் மகேஷ் கார் மீது பைக் மோதி விபத்து போதை வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.