
ஐதராபாத்,
கன்னட சினிமாவில் 'அனதரு', 'கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா'உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம்'காடேரா'. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது நடித்துள்ள படம் 'டெவில் தி ஹீரோ'. பிரகாஷ் வீர் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதில், ரச்சனா ராய், மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் வினய் கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள தர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.