நித்திரவிளை, ஜன.12: கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை கொல்லங்கோடு அருகே கேரள எல்லை பகுதியான பின்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு டாரஸ் லாரி வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதி சீட்டில் கொல்லங்கோடு என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து தாசில்தார் டிரைவரிடம் கொல்லங்கோடு என்று எழுதி விட்டு கேரளா நோக்கி வந்த காரணம் குறித்து விசாரித்த போது, டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுனு (30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த லாரி உரிமையாளர் பிரணாவ் என்பவரை தேடி வரு கின்றனர்.
The post கனிமம் கடத்த முயன்ற டாரஸ் லாரி சிக்கியது டிரைவர் கைது appeared first on Dinakaran.