கோவை: தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வரும் சூழலில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 குழுக்கல் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரும் 2 குழுக்கள் கோவை மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வால்பாறை பகுதியிலும், தமிழ்நாடு மீட்புக்குழுவினர் கோவையில் சமதள பகுதிகளிலும், பள்ளதாக்கு பகுதிகளிலும் முகாமிட்டுள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, கோவை மாவட்டத்தில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மழைகால அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றுவிடக்கூடாது என்றும், சிறு, சிறு பேரிடர் ஏற்பட்டாலும் கூட உடனடியாக சரிசெய்யும் பொறுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும் அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சிறுவாணி பகுதிகளில் ஏற்கனவே அதிக மழை பெய்து ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. எனவே பள்ளதாக்கான பகுதிகளில் யாரும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல செல்பி எடுப்பது போன்ற மோகத்திற்க்காக உயர்துரக்கும் அபாயம் உள்ள இடங்களுக்கு இளைஞர்கள் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை appeared first on Dinakaran.