கனமழை எச்சரிக்கை: மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதார துறை இயக்குநர் அறிவுறுத்தல்

3 months ago 19

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Read Entire Article