'கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல' - ஜஸ்டின் ட்ரூடோ

5 months ago 15

ஒட்டாவா,

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்த மாதம் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின. இந்த விவகாரத்தால் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் இருப்பதை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் ஒட்டாவா நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின்போது அவர் பேசியதாவது;-

"கனடாவில் காலிஸ்தானின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. அதேபோல், கனடாவில் இந்திய பிரதமர் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர். அவர்களை கனடாவில் உள்ள அனைத்து இந்து மக்களின் பிரதிநிதிகளாக கருத முடியாது."

இவ்வாறு அவர் தெருவித்தார்.

Read Entire Article