கந்தர்வகோட்டை,பிப்.1: கந்தர்வகோட்ைட அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சி அம்மா புதுப்பட்டி கிராமத்தில் வாசிக்கும் சரவணன் மனைவி பூவாயி. விவசாயக் கூலி. இவர் ஆடுகளை வளர்ந்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமான ஆடு சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை கண்டு அவர் செய்வது அறியாது உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த உடன் நிலைய அலுவலர் (பொ) அறிவழகன் தலைமையில் சகவீரர்களுடன் விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பத்திரமாக ஆட்டினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் தீயனைப்புத் துறைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
The post கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு appeared first on Dinakaran.