கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கம்

1 week ago 4

சென்னை,

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 6-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி,மதுரை திண்டுக்கல்,விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோல வருகிற 7-ஆம் தேதி இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Special trains between #Tambaram - #Tirunelveli / Tiruchendur - Dr MGR #Chennai Central to clear extra rush of the passengers during Sashti festival Advance Reservation for the above Special Trains will open shortly#SouthernRailway pic.twitter.com/QKEVsmJv37

— Southern Railway (@GMSRailway) November 5, 2024
Read Entire Article