'கத்தி' பட நடிகருக்கு நியூயார்க்கில் நடந்த சோகம்

2 hours ago 1

பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நீல் நிதின் முகேஷ். இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஜய்யின் 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இவர், தற்போது மாதவனுடன் இணைந்து நடித்த 'ஹைசாப் பராபர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 24-ந் தேதி வெளியானது.

இந்த நிலையில், நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது அடுத்த புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்குள்ள நியூயார்க் விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள், அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அதற்கு காரணம் என்னவென்றால் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லை என்று கூறியுள்ளனர்.

போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி நீல் நிதின் முகேஷை சிறைபிடித்தனர். எதைச் சொல்லியும் காதில் வாங்காமல் தன்னை 4 மணிநேரம் பிடித்து வைத்ததாக அவர் கூறினார். அதற்குப் பிறகு நடந்த விசாரணையில் தான் ஒரு நடிகர், தனது அப்பா, தாத்தா ஆகியோர் பிரபல பாடகர்கள் என்ற தன்னைப் பற்றிய விஷயங்களை அவர் சொன்ன பிறகு அவற்றை கூகுளில் சர்ச் பண்ணி பார்த்த பின்னரே அவர்கள் தன்னை விடுவித்தாக நீல் நிதின் முகேஷ் கூறியுள்ளார்.

Read Entire Article