தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தற்பொழுது தனது 109-வது படத்தில் நடிக்கிறார். 'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலகிருஷ்ணாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'டாகு மகாராஜ்' படைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தின் சாதனையை தற்போது 'டாகு மகாராஜ்' முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 9-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.