கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம்: மிகைப்படுத்தப்படுகிறது - நடிகை ஹேமமாலினி

2 hours ago 1

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29-ம் தேதி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து எதிரொலித்தது.

இந்தநிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்படுகிறது என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினி கூறியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

நாங்கள் கும்பமேளாவுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் நன்றாக நீராடினோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் நடந்த கூட்டல் நெரிசல் சம்பவம் மிகப் பெரிய சம்பவம் கிடையாது. அது மிகைப்படுத்தப்படுகிறது. கும்பமேளாவிற்கு இவ்வளவு பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம்  எனக்கூறினார்.

மேலும் நெரிசல் ஏற்பட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த ஹேம மாலினி, அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். தவறான விஷயங்களைச் சொல்வது அவர்களின் வேலை என்று அவர் கூறினார்.

Read Entire Article