கத்தார்: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீபாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியில் 2வது ரேங்கில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-7 (1-7) என லிண்டா கைப்பற்றினார். அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய ஸ்வியாடெக் 6-4, 6-4 என அடுத்த 2 செட்களிலும் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானை சேர்ந்த எலினா ரைபகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியாவை சேர்ந்த ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் எலினா ரைபகினா மற்றும் இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகின்றனர். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சோபியா கெனினை துனிசியாவின் ஆன்ஸ் ஜபேர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இவர் காலிறுதி சுற்றில் லாத்வியாவை சேர்ந்த ஜெலினா ஆஸ்டாபென்கோவை எதிர்கொள்கிறார். இன்று இரவு நான்கு காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. மற்ற காலிறுதி போட்டிகளில் ரஷ்யாவின் எகடெரினா அமெரிக்காவின் ஜெசிகாவையும், உக்ரேனியாவின் மார்டா ஒலேஹிவ்னா அமெரிக்காவின் அமண்டாவை எதிர்கொள்கிறார்.
The post கத்தார் ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ஸ்வியாடெக்-ரைபகினா பலப்பரீட்சை appeared first on Dinakaran.