தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 1/2 கிலோ
முந்திரி – 10
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 4 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 4 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி.
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு தாளித்து, நறுக்கிய கத்தரிக்காயை உப்பு போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் வெங்காயத்தை கொரகொரவென்று அரைத்து சேர்க்கவும். பிறகு தக்காளியை வேகவைத்து தோல் உரித்து பிழிந்து சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, வறுத்து பொடித்த முந்திரி, எள் மற்றும் வேர்க்கடலையை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். பிறகு புளி கரைசலை சேர்த்து கொதித்ததும் இறக்கவும். சுவையான கத்தரிக்காய் கட்டா தயார்.
The post கத்தரிக்காய் முந்திரி கட்டா appeared first on Dinakaran.