தஞ்சாவூர், டிச. 9: கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப்பெருமாளை ஏராளமானோர் தரிசித்தனர். தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையத்தில் உள்ள யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மட்டும் யோக நரசிங்கப் பெருமாள் கண்திறந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதேபோல், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாத 4வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு யோக நரசிங்கப் பெருமாளுக்கு 16 வகையான செல்வங்களை குறிக்கும் வகையில் 16 வகையான அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண் திறந்த நரசிங்கப் பெருமாளை தரிசனம் செய்தனர்.
The post கண்திறந்து காட்சியளித்த யோக நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.