கண்ணை மூடிக்கிட்டு எடப்பாடிக்கு காவடி தூக்காதீங்க… டிடிவி. தினகரன் அட்வைஸ்

3 months ago 17

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக ஜெயலலிதாவின் இயக்கம். எடப்பாடியின் கட்டுப்பாட்டில் அந்த இயக்கம் வந்தவுடன் ஜெயலலிதாவின் கொள்கை வழியிலிருந்து மாறியதால் உருவான இயக்கம் அமமுக. ஜனநாயக ரீதியாக அமமுக வெற்றி பெற்று ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். எடப்பாடியிடம் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு காவடி தூக்குபவர்கள், தங்களை தாங்களே ஏமாற்றி கொள்பவர்கள். இதனால் விழித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கண்ணை மூடிக்கிட்டு எடப்பாடிக்கு காவடி தூக்காதீங்க… டிடிவி. தினகரன் அட்வைஸ் appeared first on Dinakaran.

Read Entire Article