"கண்ணப்பா" படத்தின் புதிய வீடியோ பாடல் அப்டேட்

5 hours ago 1

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

'கண்ணப்பா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் 'கண்ணப்பா' திரைப்படத்தின் புதிய வீடியோ பாடல் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Introducing Ariaana Manchu & Viviana Manchu.Two powerful young voices. One legendary tale.The Stalapurana of Sri Kalahasti comes alive through their soulful rendition — a story every devotee must know."Sri-Kala-Hasti" lyrical video from #Kannappa launches on 28th May.Let… pic.twitter.com/YBXPrvkA1N

— Kannappa The Movie (@kannappamovie) May 24, 2025
Read Entire Article