சர்வதேச டென்னிஸ்: 3-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோகோவிச்

3 hours ago 2

ஜெனீவா,

முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஜெனீவா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்து வீரரான ஹூபர்ட் ஹர்காஸ் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஹர்காஸ் கைப்பற்றி முன்னிலை பெற்றார். பின்னர் சரிவில் இருந்து மீண்டு வந்த ஜோகோவிச் அடுத்த 2 செட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 5-7, 7-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சர்வதேச டென்னிசில் ஜோகோவிச் கைப்பற்றிய 100-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜிம்மி கனோர்ஸ் (அமெரிக்கா) - 109 பட்டம்

2. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) -103 பட்டம்

3. நோவக் ஜோகோவிச் (செர்பியா) - 100 பட்டம் 

Read Entire Article