"கண்ணப்பா" படத்தின் காமிக்ஸ் வீடியோ வெளியீடு

1 day ago 4

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

'கண்ணப்பா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது.

படத்தின் கதைக்களத்தை காமிக்ஸ் வடிவத்தில் திரைப்படம் வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் காமிக்ஸ் கதையின் 3ம் அத்தியாயத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

The final chapter unfolds! The journey of #Kannappa in our Animated Comic Book series comes to an epic conclusion with Book-3! A tale of devotion, love, sacrifice, and destiny, beautifully brought to life through stunning animation.Har Har Mahadev Har Ghar Mahadev… pic.twitter.com/eoo3fbLInB

— Kannappa The Movie (@kannappamovie) May 16, 2025
Read Entire Article