திருவையாறு, பிப்.11: திருவையாறு அருகே கண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு 1 முதல் 19 வயதுடைய மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி பணியை துவங்கி வைத்தார். இதில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கலைவாணி, பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, உதவி தலைமையாசிரியர் கண்ணதாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிகளில் 1 முதல் 19 வயதுடைய மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் அவர்களது ரத்த சோகை தடுக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பட்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த உதவும். இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,86,000 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 1,98,000 பெண்களும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் appeared first on Dinakaran.