நாமக்கல் : சேந்தமங்கலம் அடுத்த நாகராஜபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி மோகனாம்பாள் (30). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னையும், தனது கணவரையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனது 2 குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை சமாதானப் படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். பின்னர் அவர், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மாமியாருக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்தி வருகிறோம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், அந்த காலியிடத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். கடந்த 3ம் தேதி என் வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், என்னையும், என் கணவரையும் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தற்போது என் கணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திர். ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post கணவர் மீது தாக்குதல் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பெண் தர்ணா-ேபாலீசார் விசாரணை appeared first on Dinakaran.