கணவர் சேலை வாங்கி தராததால் அதிருப்தி... ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

1 month ago 15

தும்கா,

ஜார்கண்ட் மாநிலத்தில் கணவர் புதிய சேலை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த இளம்பெண் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தும்கா மாவட்டத்தில் உள்ள பாக்ஜோபா கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தோ தேவி (26 வயது). இவரது கணவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தசராவை முன்னிட்டு செந்தோ தேவி, தன்னுடைய கணவரிடம் புதிய சேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரால் சேலை வாங்கி தர முடியவில்லை.

இந்த நிலையில் கணவர் சேலை வாங்கி தராததால் அதிருப்தியடைந்த செந்தோ தேவி நேற்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article