திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள குன்னவலம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா (32). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 2019ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து தனியாக வசித்தனர். இதையடுத்து பாலகிருஷ்ணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2020ம் ஆண்டு குன்னவலம் கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் காவியாவுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதை பயன்படுத்திய ரவீந்திரன், காவியாவை திருமணம் செய்துகொள்கிறேன். தான் அரசு வேலையில் உள்ளதால் குடும்பத்தை நன்றாக கவனித்துகொள்வேன்’ என்று தெரிவித்து காவியாவுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
இதன்பிறகு சென்னை வியாசர்பாடியில் வீடு பார்த்து வைத்து காவியாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதன்காரணமாக காவியா 7 மாதம் கர்ப்பமானார். இதனிடையே கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு காவியாவுக்கு தெரியாமல் வேறு பெண்ணை ரவீந்திரன் திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார். இது குறித்து தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த காவியா கேட்டபோது, ‘’வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு’ என்று ரவீந்திரன் கூறியுள்ளார். இதுசம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட அலுவலகத்தில் காவியா புகார் கொடுத்தார். திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கணவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டு வாலிபருடன் வசித்த பெண் கர்ப்பம்: வேறு பெண்ணை வாலிபர் மணந்ததால் நிர்க்கதியானார் appeared first on Dinakaran.