கணவனை பிரிந்த இளம்பெண் தற்கொலை

4 months ago 15

தர்மபுரி, ஜன.4: கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூர் அருகே உள்ள கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தீபா ஓசூரில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தீபா கணவனை பிரிந்து, தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பாறைக்கொட்டாய் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, சத்தியநாராயணன் தீபாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கணவனை பிரிந்த இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article