திருத்துறைப்பூண்டி, அக். 4: கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்டம் சார்பில் தீவாம்பாள்பட்டினத்தில் டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டனர். மேலும் தீவாம்பாள்பட்டினம் மாரியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்தும் புட்களை அகற்றியும் நடைபாதை வழியை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி கல்வி மையம் ஒருங்கிணைப்பாளர் சத்யப்பிரியா கலந்து கொண்டு பணம் இல்லா பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் பேசினார்.
டிஜிட்டல் இந்தியா என்பது ஆன்லைன் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதையும் இணைய இணைப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு குடிமக்களுக்கும் அதிவேக இணையத்தை கிடைக்க செய்தல், தொழில் செய்வதை எளிமையாக்கி நிதி பரிமாற்றங்களை செய்வது போன்ற சேவைகள் டிஜிட்டல் இந்தியா வாயிலாக கிடைக்கும். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்த பிறகு ஸ்மார்ட்போன் பயன்பாடு, இணைய இணைப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து உள்ளன என்றார்.
கருத்தரங்க நிகழ்ச்சியில் நிதி கல்வி அறிவு மையம் ஆலோசகர் கலைமகள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சந்திரசேகரன் வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் கபீர் தாஸ் நன்றி கூறினார்.
The post கட்டிமேடு அரசு பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கம் appeared first on Dinakaran.