கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி

3 hours ago 2

சென்னை: “தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களைக் காப்பது அல்ல. எனவே, கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வசூலிக்கப்பட்டக் கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் சென்னைக்கு திரும்பி வருவதற்காக வசூலிக்கப்படும் நிலையில், இந்தக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article