சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதி, 113வது வட்ட மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கட்சி கட்டுப்பாட்டை மீறிய திமுக கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.