கடையநல்லூர் பள்ளியில் விளையாட்டு விழா

6 months ago 16

கடையநல்லூர்,நவ.11: கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார். விழாவில் சொக்கம்பட்டி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் உடையார்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களின் ஒலிம்பிக் தீப அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

தாளாளர் அண்ணாதுரை மாணவர்களின் உடல்திறன், ஆரோக்கியம் குறித்தும், செயலாளர் சண்முகசுந்தரம் மாணவர்களின் ஒழுக்கம், ஒற்றுமை குறித்தும், பொருளாளர் மாரியப்பன் மாணவர்களை சாதனையாளராக உருவாக்குவதில் ஆசிரியர்கள், பெற்றோர்களின் பங்கு குறித்தும் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் பிரதீப் ஒருங்கிணைத்தார். ஆசிரியை மங்கையர்கரசி நன்றி கூறினார்.

The post கடையநல்லூர் பள்ளியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article