புது டெல்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப். 12) நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி தொடரின் தொடக்கத்தில் இருந்தே சாம்பியன்ஸ் டிராபியை கவனத்தில் வைத்தே விளையாடி வருகிறது. அதனால், பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அதிரடி மாற்றங்களை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் இந்திய அணியின் முழு கவனமாக இருக்கும். பும்ராவின் உடற்தகுதி இன்னும் சில நாள்களில் உறுதிசெய்யப்பட்டுவிடும். பும்ரா இல்லையெனில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணா அல்லது அனுபவ வீரர் முகமது சிராஜ் இருவரில் ஒருவர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பிடிப்பர்.
வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஸ்குவாடில் குல்தீப் இடத்தில் விளையாடினார். இப்போது அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்குமா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. ஒருவேளை வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வாஷிங்டன் சுந்தருக்கு சிக்கல் தான். இத்தகைய சிக்கல்கள், குழப்பங்களுக்கு நடுவே நாளைக்குள் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி ஸ்குவாடை அறிவிக்க இருப்பதால் என்னென்ன மாற்றங்களை செய்ய இருக்கிறது என்பது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது.
நாளைய போட்டியில் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர்களாக தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றங்களை பார்க்கலாம். முதலில், கேப்டன் ரோகித் சர்மா 3வது போட்டியில் ஓய்வெடுத்து, கேப்டன் பொறுப்பை சுப்மன் கில்லிடம் கொடுக்கலாம்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு)
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப்/வருண், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
The post கடைசி போட்டியில் யாருக்கு வாய்ப்பு? appeared first on Dinakaran.