கடை வாடகைக்கு ஒன்றிய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு: ராமதாஸ் எதிர்ப்பு

1 month ago 8

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். கடை வாடகைக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதை ரத்துசெய்ய வணிகர்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு திரும்ப பெற மறுக்கிறது. இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தவேண்டும். அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலவழிகள் உள்ளது. பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கடை வாடகைக்கு ஒன்றிய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு: ராமதாஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article