கடை, நிறுவனங்கள் பதிவு செய்ய தொழிலாளர் துறை யோசனை

3 months ago 20

 

ஈரோடு,அக்.4: ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடை மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி கடந்த ஜூலை 2ம் தேதிக்கு பிறகு புதிதாக துவங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்கள் பணியமர்த்தி இருந்தால்,அந்நிறுவன உரிமையாளர் இத்துறையில் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவுக்கான விண்ணப்பத்தை இத்துறையின் இணைய தளம், < https://labour.tn.gov.in/ > ‘படிவம்-Y’ ல் பதிவு கட்டணம், ரூ.100 செலுத்தி 6 மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சம்மந்தப்பட்ட ஆய்வாளர்,பதிவு சான்று படிவம் ‘Z’ ல் இணைய வழியில் பதிவேற்றம் செய்வார்.அவ்வாறு பதிவு சான்றிதழ் வழங்காவிட்டால்,பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.மேலும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர் பணி செய்து, தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிறுவனம்,கடை பதிவு கட்டணம் ஏதுமின்றி இத்துறை இணைய வழியில், படிவம் ‘ZB’ல் ஒரு ஆண்டுக்குள் சமர்பிக்க வேண்டும். அதனை ஆய்வாளர் சரி பார்த்து, ‘படிவம்-Z’ல் பதிவு சான்றிதழை இணைய வழி தளத்தில் பதிவேற்றம் செய்வார். திருத்தங்களையும், இதே வழியில் செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post கடை, நிறுவனங்கள் பதிவு செய்ய தொழிலாளர் துறை யோசனை appeared first on Dinakaran.

Read Entire Article