
டெல்லி,
இந்தியாவுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்து கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி சஞ்சய் தத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது செய்யப்பட்டுள்ளர் என தெரிவித்துள்ளார். மேலும், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படகுகள் வேட்டையாடுத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக அகதிகளை அழைத்து வருதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.