
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
அதன்படி, 'குட் பேட் அக்லி' இந்தியாவில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அஜித்தின் முந்தைய படங்களான 'விடாமுயற்சி' மற்றும் 'துணிவு' படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும்.
'விடாமுயற்சி' உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் ரூ.26 கோடி ஈட்டியது, அதே நேரத்தில் 'துணிவு' முதல் நாளில் ரூ.24.4 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் ரூ.30 கோடி வசூலித்துள்ள 'குட் பேட் அக்லி', ரூ.31 கோடி வசூலித்த 'வலிமை' படத்தை முந்த தவறிவிட்டது.