பணியிடங்கள் விவரம்
1. Assistant Commandant (General Duty-Male) (2026- Batch): 110 இடங்கள் (பொது-40, ஒபிசி-38, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-13, எஸ்டி-15). சம்பளம்: ரூ.56,100. தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant Commandant (Technical) பிரிவுகள்: Mechanical/Electrical/Electronics : 30 இடங்கள் (பொது-15, ஒபிசி-9, எஸ்சி-4, எஸ்டி-2).
Mechanical Engineering- தகுதி: Naval Architecture/Mechanical/Marine/ Automobile/Mehcatronics/Industrial and Production/Metallurgy/Design/Aeronautical/Aerospace ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Electrical and Electronics- தகுதி: Electrical/Electronics/Telecommunication/Instrumentation/Instrumentation & Control/ECE/Power Electronics ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 25க்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி யினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் மற்றும் 2ம் கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் கேரளா, எழிமலாவிலுள்ள கடற்படை தளத்தில் 44 வாரங்கள் பயிற்சியளிக்கப்பட்டு அதிகாரி பணி வழங்கப்படும்.
உடற்தகுதி: குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ற எடை, மார்பளவு 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.300/- மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.indiancoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024.
The post கடலோரக் காவல் படையில் 140 அசிஸ்டென்ட் கமாண்டன்ட் appeared first on Dinakaran.