கடலோர காவல் படையில் குரூப் ‘சி’ பணியிடங்கள்

1 month ago 10

பணி: Enrolled Follower (Sweeper/
Safaiwal): 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1).
வயது: 17.04.2025 தேதியின்படி 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
தகுதி: 10ம் வகுப்பு/ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். மார்பளவு சரியான அளவில் இருக்க வேண்டும். மேலும் நல்ல பார்வைத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது மற்றும் ஒபிசியினர் 50% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.joinindiancoastguard.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.04.2025.

The post கடலோர காவல் படையில் குரூப் ‘சி’ பணியிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article