கடலூர்: மளிகை கடையில் பிரிட்ஜ் வெடித்து விபத்து - 2 பேர் படுகாயம்

3 hours ago 2

கடலூர்,

கடலூர் மாவட்டம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர், அவரது வீட்டின் முன்பு மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று இரவு 10 மணியளவில் கடையை அடைத்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி, இந்திரா ஆகிய 2 பேர் அவரது கடையில் மளிகை பொருட்களை வாங்க வந்தனர்.

இதில் இந்திரா என்பவர் பொருட்களை வாங்கிவிட்டு சிறிது தூரம் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக கடையில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்தது. பிரிட்ஜில் உள்ள கம்பிரசர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் கடை முழுவதும் சேதமடைந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சண்முகம் மற்றும் ரவி ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சண்முகத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெடிப்பு சம்பவத்தின்போது சில கண்ணாடி துகள்கள் சிதறியதில், அருகில் இருந்த 6 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read Entire Article