
சென்னை
தவெக கொடிக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மனுவை திரும்ப பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி. அதேசமயம் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் பிரதான வழக்கில் சேர்க்க மனுத் தாக்கல் செய்ய உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.