
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். தொழிலாளி. இவரது மகன் பூர்விக் (9 வயது). இவன் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். வினோத்குமாரின் பக்கத்து வீட்டில் சிமெண்டு கல்தூணில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பூர்விக் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கல் தூண் சாய்ந்து பூர்விக் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் பூர்விக்கை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூர்விக் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.