ரெட்டிச்சாவடி, டிச. 6: பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதிகளான ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை மேட்டுப்பாளையத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது. அச்சமயம் வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த வீடுகளை துணை ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் கடலூர் அருகே அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம், கலையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் குறைய தொடங்கிய நிலையில், தென்பெண்ணையாறின் கரையோர கிராமங்களான அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுவதும் சேதமாகி போக்குவரத்து நடைபெறாத நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கடலூர் அருகே வெள்ளத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் appeared first on Dinakaran.