கடலூர் அருகே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் - ஒருவர் பலி

5 hours ago 2

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராம்நத்தம் பகுதியில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 54 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துள்ளானது. விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தநிலையில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து சம்பவம் காரணமாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article