கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பணை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில், கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் அவர்களின் மேற்பார்வையில் திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் அவர்களது மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் கதிரவன், கணபதி, ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் 28.03.2025 ந் தேதி மதியம் M. புதூர் காசநோய் மருத்துவமனை அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு சந்தேகத்தின்பேரில், அங்கிருந்த 9 நபர்களை மடக்கி பிடித்து விசாரணையில் 1) சிவாஜி (எ) சிவாஜிகணேசன், வயது/19, S/O. ரங்கசாமி, புதுநகர், திருவந்திபுரம், M.புதூர், கடலூர். (தற்போதைய முகவரி காவலர் குடியிருப்பு பின்புறம், முருகன் கோயில் தெரு, ஆனைக்குப்பம், கடலூர்) 2).சந்துரு (எ) சந்திரசேகர் வயது /29, S/O. வேலு, No-362 பன்னீர் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை. (தற்போதைய முகவரி 9-வது தெரு, காமாட்சி அம்மன் நகர், வாழவந்தான் கோட்டை, துவாக்குடி,திருச்சி)
3).ஆனந்த், வயது/22, S/O. வீரபத்திரன், பிள்ளையார் கோவில் தெரு, கொக்குபாளையம், பண்ருட்டி-TK. 4).சூர்யா (எ) விஜய் வயது/21, S/O. லட்சுமணன், பெரிய தெரு, கோண்டூர், கடலூர் 5).எலி (எ) விக்னேஷ் வயது/22, S/O. சிவா, புதுநகர், திருவந்திபுரம், M.புதூர், கடலூர் 6).தோல் (எ) சூர்யபிரதாப் வயது/21, S/O. சுரேஷ், புதுநகர், திருவந்திபுரம், M.புதூர், திருப்பாதிரிபுலியூர், கடலூர் 7). அரி (எ) அரவிந்த் வயது/23, S/O. கலியபெருமாள், புதுநகர், திருவந்திபுரம், M.புதூர், கடலூர் 8). குண்டுபாலா (எ) ஆகாஷ் வயது/19, S/O. நீலப்பன், மாரியம்மன் கோயில் தெரு, அரிசிபெரியாங்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் 9) கார்த்தி (எ) கார்த்திகேயன் வயது/20 த/பெ. மகாதேவன், சிவாநகர், வண்டிப்பாளையம் ரோடு, கடலூர் ஆகியோர்களை மடக்கி பிடித்தும், விசாரணை மேற்கொண்டு, 23 கிலோ எடையுள்ள கஞ்சா, மோட்டார் சைக்கிள்கள்-2 மற்றும் செல்போன்கள் -7 ஆகியவற்றை கைப்பற்றியும், எதிரி சிவாஜி (எ) சிவாஜிகணேசன் என்பவர் ஒப்புதல் வாக்குமூலத்தில் அனைவரும் கஞ்சா விற்பணையில் பாட்னராக செயல்பட்டு வந்தனர்.
அதில் வரும் லாபத்தை சரிசமமாக பிரித்து கொள்வோம் எனவும், ஒன்றாக இணைந்து பணம் போட்டு சந்திரசேகர் மூலமாக ஆந்திரா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து பிரித்து விற்பனை செய்து வருவதாகவும், ஒரு வாரத்திற்கு முன்பு சிவாஜி (எ) சிவாஜிகணேசனும், சந்துரு (எ) சந்திரசேகரும் ஆந்திரா அனக்காப்பள்ளி மாவட்டம், ஜோதாவரம் தாலுக்கா, நரசய்யாபேட்டை சென்று பிரதீப் த/பெ. ஈஸ்வரன், 10 C கிழக்கு தெரு, மேக்கலார்பட்டி PO, கீரப்பட்டி கிராமம், உசிலம்பட்டி தாலுக்கா மதுரை மாவட்டம் என்பவரிடமிருந்து சுமார் 23 கிலோ கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைத்து தற்போது விற்பனைக்காக பிரித்து வைத்துக்கொண்டிருந்த போது கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
23 கிலோ கஞ்சா போதை பொருளை, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்து விற்பணை செய்ய முயன்றவர்களை, கைது செய்து வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
The post கடலூரில் சுமார் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு appeared first on Dinakaran.