சாயல்குடி,ஜன.26: கடலாடி நீதிமன்றத்தில் பொதுமக்களுக்காக புதிய இ.சேவை மையம் துவங்கப்பட்டது. கடலாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதிய இ.சேவை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதி சரவணன் தலைமை வகித்தும், திறந்து வைத்தார்.
இந்த மையத்தின் மூலம் வழக்கறிஞர்கள், காவல் துறையினர், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் எளிதாகத் தாக்கல் செய்யவும், எளிய முறையில் அழைப்பாணை உள்ளிட்ட வழக்கு தொடர்பான விவரங்களை எளிய முறையில் அறிந்து கொள்வதற்கும் இந்த இ.சேவை மையம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூபு அலிகான், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மோகன்ராம், கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா, கடலாடி வழக்கறிஞர் சங்க செயலாளர் பூ முருகன். பொருளாளர் பாண்டி உள்ளிட்ட வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கடலாடி நீதிமன்றத்தில் புதிய இ.சேவை மையம் திறப்பு appeared first on Dinakaran.